×

கோயம்பேட்டில் மேம்பாலம் கட்டுமான பணி தீவிரம்: ஆக்கிரமிப்பாளர்களுக்கு எச்சரிக்கை

அண்ணாநகர்:  கோயம்பேட்டில் கடந்த 2015ம் ஆண்டு 93.5 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் அலுவலக பணிக்கு செல்ல முடியாமல் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கோயம்பேடு மேம்பால பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால் ஆக்கிரமிப்பாளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘வரும் மே மாதத்திற்குள் கோயம்பேடு மேம்பால கட்டுமான பணியை முடிக்க வேண்டும் என்கிற இலக்குடன் வேகமாக பணிகள் நடந்து வருகிறது. நெடுந்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் வீடுகள், கடைகள் என நிறைய ஆக்கிரமிப்புகள் உள்ளன. அவற்றை அகற்றாவிட்டால் மேம்பால பணிகள் முடிவதற்கு காலதாமதமாகும். எனவே இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். அப்போதுதான் பணிகளை விரைவாக முடிக்க முடியும்’’ என்றனர்.

Tags : occupants ,Coimbatore ,
× RELATED கோவை அவிநாசி மேம்பாலம், லங்கா கார்னரில் தேங்கிய மழைநீர் வெளியேற்றும் பணி