×

அரியாங்குப்பத்தில் டெங்கு கள ஆய்வு

புதுச்சேரி, அக். 31: புதுச்சேரி அரியாங்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தேசிய பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம் சார்பில் அரியாங்குப்பத்தில் உட்பட்ட ஸ்ரீனிவாசா அப்பார்ட்மெண்ட், அம்பேத்கர் நகர், சண்முகா நகர், பிசிபி நகர் ஆகிய இடங்களில் டெங்கு கொசு உற்பத்தியை கண்டறிந்து அழிக்கும் பணி நடந்தது. அரியாங்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி ஜமுனா வரவேற்றார். சுகாதார இணை இயக்குனர்கள் ரகுநாதன், முருகன், தேசிய பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்ட அதிகாரி சுந்தர்ராஜ், மலேரியா உதவி இயக்குனர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெயமூர்த்தி எம்எல்ஏ தலைமை தாங்கி, டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கு களஆய்வு  மேற்கொண்டார்.

அப்போது, ஒவ்வொரு வீடாக சென்று டெங்கு கொசு உற்பத்தி ஆகும் இடங்களை கண்டறிந்தார். தேவையற்ற பொருட்களில் நீர் தேங்குவதை தடுக்கும்படியும், டெங்கு கொசு உற்பத்தி உருவாகும் தேவையற்ற பொருட்களான தேங்காய் மட்டை, ஆட்டுரல், டீ கப், தென்னை மட்டை, ஆகியவற்றை மழை தேங்காவாறு அப்புறப்படுத்தும் படியும் பொதுமக்களிடையே எடுத்துரைத்து, டெங்கு விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார். தொடர்ந்து அறுபடை வீடு மருத்துவ கல்லூரி மாணவிகளின் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் பன்னீர்செல்வம், சுகாதார உதவியாளர்கள் ஜெகநாதன், திலகவதி, பன்னீர்செல்வம் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...