×

வகுப்பறைகள் இல்லாமல் தவிக்கும் மாணவர்கள்

புதுச்சேரி, அக். 31: புதுச்சேரி கதிர்காமத்தில் தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு எல்கேஜி முதல் 10ம் வகுப்பு வரை 900 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த 7 வருடங்களுக்கு முன்பு நடுநிலைப்பள்ளியாக இருந்து, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து, ஏழு வருடங்களாக 10ம் வகுப்பில் 100 சதவித தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகிறது. இப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டதன் காரணமாக புதிய வகுப்பறைகள் துவங்க போதிய இடம் இல்லாத காரணத்தினால் கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தற்காலிக ஷெட் அமைத்து நடுநிலைப் பிரிவு வகுப்புகளை அங்கே நடைபெற பணித்தனர். இதனையடுத்து 6, 7, 8 ஆகிய வகுப்பு மாணவ, மாணவிகள் இங்கே பயில துவங்கினர்.

இந்த தற்காலிக ஷெட் கூரை சேதமுற்று, மழை காலங்களில் மழைநீர் வகுப்பறையில் உட்புகுந்ததாலும், கோடைகாலத்தில் அதிக அளவு வெப்ப தன்மை காரணமாக மாணவ - மாணவிகளும் ஆசிரியர்களும் பாதிப்பு அடைந்தனர். இந்நிலையில் நூறு சதவித தேர்ச்சி அடைந்த காரணமாக, புதுச்சேரி அரசு வழங்கிய ரூ.2 லட்ச ரூபாயை சேதமடைந்த பழைய சிமெண்ட் கூரைகளை அகற்றிவிட்டு, புதியதாக தகரத்தால் ஆன கூரைகள் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நடைபெற்று வந்தன. இச்சூழ்நிலையில் அக்கட்டிடம் தற்காலிகமாக கட்டப்பட்டதன் காரணமாக, பல்வேறு இடங்களில் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டு பலவீனமான நிலையில் உள்ளது. இதனால் இக்கட்டிடத்தில் மாணவ, மாணவிகள் பயில்வதற்கு அச்சப்படுகின்றனர். இதுகுறித்து பெற்றோர், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பலமுஐற கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் கூறியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்பொழுது மழை காலம் துவங்கிவிட்ட நிலையில் சேதமடைந்த சுவர்கள் எந்நேரத்திலும் இடிந்து விழும் சூழல் உள்ளது. இதனால் பள்ளி நிர்வாகம் மாணவர்களை பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமர வைத்துள்ளனர்.

இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், தொடர்ந்து 7 ஆண்டுகளாக நூறு சதவித தேர்ச்சியினை பெற்றுத்தரும் அரசு பள்ளிக்கு புதிய வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தின் அரசு உடனடியாக கட்டித்தர ஏற்பாடு செய்ய வேண்டும். அதுவரை கதிர்காமம் பெண்கள் பள்ளியில் தில்லையாடி வள்ளிம்மை பள்ளியில் 6, 7, 8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்த வகுப்புகளை ஒதுக்க வேண்டும் என்றனர்.

Tags : classrooms ,
× RELATED காவலர்களுக்கு எஸ்பி அறிவுறுத்தல்...