×

கடையநல்லூரில் மதநல்லிணக்க தீபாவளி

கடையநல்லூர், அக்.27: கடையநல்லூரில் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மற்றும் இளைஞர் காங்கிரஸ் சார்பில்  மதநல்லிணக்க தீபாவளியை முன்னிட்டு பட்டாசு மற்றும் புத்தாடை வழங்கும் விழா நடந்தது. தாருஸ்லாம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ரெசவு முஹம்மது தலைமை வகித்தார். இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் அப்துல்காதர் வரவேற்றார்.

மாவட்ட துணைத்தலைவர் ராம்மோகன், எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் ஜாபர் அலி உஸ்மானி, அமமுக சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் அலி, திமுக வஹாப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். சிறுபான்மைப் பிரிவு மாவட்ட துணைத்தலைவர்  பூபதி, மாவட்ட பட்டதாரிகள் பிரிவு செயலாளர் அயூப்கான் வாழ்த்தி பேசினர். எஸ்டிபிஐ கட்சி ராஜா முஹம்மது, காங்கிரஸ் சிறுபான்மை மாவட்ட துணைத்தலைவர், மன்சூர், காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு அருள்ராஜ் பிரிவு, விடுதலை சிறுத்தைகள் கட்சி இசக்கி மற்றும் தோழமை கட்சி பிரதிநிதிகளும், ஏராளமான இளைஞர்களும் பங்கேற்றனர். இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் அப்துல்காதர் நன்றி கூறினார்.

Tags : Diwali ,Kadayanallur ,
× RELATED மனைவியை தாக்கிய கணவர் கைது