×

4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று சித்தேரி வாய்க்காலில் கவர்னர் திடீர் ஆய்வு

பாகூர், அக். 27:   பாகூர் அருகே உள்ள சித்ேதரி வாய்க்காலில் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கவர்னர் கிரண்பேடி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி நேற்று காலை பாகூர் அருகே தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சித்தேரி அணைக்கட்டுக்கு வந்தார். அப்போது, சித்தேரி அணைக்கட்டு, சித்தேரி வாய்க்கால் தூர்வாரப்பட்டுள்ளதா? என பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அணைக்கட்டில் இருந்து வாய்க்கால் கரையோரம் உள்ள சாலையில் நடந்து சென்ற கவர்னர், குருவிநத்தம் தூக்குப்பாலம் வழியாக பாகூரை கடந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கன்னியக்கோவில் தாங்கல் வரை சென்று ஆய்வு செய்தார். அப்போது, நீர்நிலைகளை தூர்வாரி பாதுகாக்க வேண்டும். வாய்க்காலை தூர்வாரினால் தான் நீரை தேக்கி வைத்து சேமிக்க முடியும், என அதிகாரிகளிடம் தெரிவித்தார். தூர்வாரும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு வரும் நவம்பர் மாதம் 7ம் தேதி கவர்னர் மாளிகையில் பாராட்டு விழா நடத்தப்படும் என்றார்.   

பின்னர் கன்னியக்கோவில் தாங்கலில் கயிறு கட்டி அதன் மூலம் அக்கரைக்கு சென்ற கவர்னர் கிரண்பேடி அங்கு காலை உணவு அருந்தினார். பின்னர் தனது ஆய்வு பணியை முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதையடுத்து அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொதுப்
பணித்துறை தலைமை பொறியாளர் மகாலிங்கம் மற்றும் துறை அதிகாரிகள், உள்ளாட்சி துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனிடையே கவர்னர் ஆய்வின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கிருமாம்பாக்கம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் தன்வந்திரியை விஷ வண்டு தாக்கியது. வலியால் அலறி துடித்த அவர் பின்னர் அங்கேயே மயங்கி விழுந்தார். சக போலீசார் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Governor ,inspection ,river ,Siddheri ,
× RELATED பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து