×

இன்று (அக்.25) பிகாசோ பிறந்தநாள் குஜிலியம்பாறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் முகாம்

குஜிலியம்பாறை, அக். 25: குஜிலியம்பாறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் சிறப்பு முகாம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று நடந்தது. பழனி சப்&கலெக்டர் உமா தலைமை வகித்தார். முகாமில் மாற்றுத்திறனுடைய மூளைவளர்ச்சி குன்றியோர், கை, கால் பாதிப்பு, காதுகேளாதோர், வாய்பேச இயலாதோர், கண்பார்வை குறைபாடு உள்ளிட்ட 373 பேர் கலந்து கொண்டனர். முன்னதாக முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தளவாட உபகரணங்கள் கேட்டு சப்கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இதில் 89 பேருக்கு உதவித்தொகை, 56 பேருக்கு இன்சூரன்ஸ் கார்டு, ஒரு நபருக்கு ஊன்றுகோல், ஒரு நபருக்கு வீல் சேர், 11 பேருக்கு பராமரிப்பு உதவித்தொகை, 128 பேருக்கு ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை, 32 பேருக்கு பஸ் பாஸ், 49 பேர் புதிதாக அடையாள அட்டை, 6 பேர் தொழுநோய் உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இதில் தாசில்தார் சிவசுப்பிரமணியன், தனிவட்டாச்சியர் நவநீதகிருஷ்ணன்,
மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுவாமிநாதன், வட்டார மருத்துவ அலுவலர் இளங்கோ, பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) கோபிநாத், பாளையம் வருவாய் ஆய்வர் மாரியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Picasso ,disabled ,grievance camp ,
× RELATED காவல்துறை சார்பில் சிறப்பு குறைதீர் முகாம்