×

ராசிபுரம் டிஎஸ்பிக்கு குடியரசு தலைவர் விருது

ராசிபுரம், அக்.25: ராசிபுரம் உட்கோட்ட டிஎஸ்பி விஜயராகவனுக்கு குடியரசு தலைவர் விருது வழங்கப்பட்டுள்ளது. ராசிபுரம் டிஎஸ்பி விஜயராகவன் இதற்கு முன்பு சேலம், கோவை பகுதிகளில் பணியாற்றியுள்ளார். கோவையில் சிபிசிஐடி பிரிவில் பணியாற்றிய போது, சிறப்பாக பணியாற்றியதற்காக சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் கடந்த 23ம் தேதி நடந்த விழாவில், இவருக்கு விருது வழங்கப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டிஎஸ்பி விஜயராகவனுக்கு விருதை வழங்கி கவுரவித்தார். இதில் தமிழக அமைச்சர்கள், தமிழக டிஜிபி டி.கே.திரிபாதி உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் இதில் பங்கேற்றனர். விருது பெற்ற டிஎஸ்பி விஜயராகவனை நாமக்கல் எஸ்பி அருளரசு, ராசிபுரம் நகராட்சி ஆணையர் கணேசன் மற்றும் பிரமுகர்கள் வாழ்த்தினர்.

Tags : Rasipuram DSP ,
× RELATED ராசிபுரம் டிஎஸ்பி அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை ஆலோசனை கூட்டம்