×

சேந்தமங்கலத்தில் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர் முகாம்

சேந்தமங்கலம், அக்.25:  சேந்தமங்கலம் தாலுகா அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் முகாம் நடந்தது. நாமக்கல் ஆர்டிஓ (பொ) பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் தலைமை தாங்கினார். முகாமில், 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். வருவாய் துறையின் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான மாதந்திர உதவித்தொகையாக ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ், 11 பேருக்கு மாதந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை ஆர்டிஓ வழங்கினார். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன், சேந்தமங்கலம் தாசில்தார் ஜானகி உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Special Compensation Camp for Disabled Persons ,Senthamangalam ,
× RELATED பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் பாஜ பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை