×

ஆசிரியர் கல்வி பட்டய தேர்வு முடிவுகள் வெளியீட

தர்மபுரி,  அக்.25: தர்மபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி  நிறுவன முதல்வர் ஹேமலதா  வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி  நிறுவனத்தில் பயின்று, பட்டயத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள்,  தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்வு முடிவுகளை  பயிற்சி நிறுவனத்திலும் அறிந்து கொள்ளலாம். அதேபோல தனித்தேர்வர்கள்,  தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பித்த ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி  நிறுவனத்தில், தங்களுடைய அடையாள அட்டை, நுழைவு சீட்டு ஆகிய சான்றுகளை  எடுத்துச்சென்று காட்டி, தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். மேலும், விடைத்தாளர்களின் ஒளி நகல் பெறவும், மறு கூட்டல் செய்யவும்  இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை நிரப்பி,  அதற்கான கட்டணத்தை வரும் 30ம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி வரை மாவட்ட  ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் செலுத்தி, பதிவேற்றம் செய்ய  வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா