×

ராம் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் சாதனை

அரூர், அக்.25:தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில், மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் கம்பைநல்லூர் ராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். 14 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் மாணவர் பிரியதர்ஷன் முதலிடமும், இரட்டையர் பிரிவில் 3ம் இடமும் பெற்றுள்ளார். 19வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கான இறகுப்பந்து இரட்டையர் பிரிவில் மாணவிகள் ராஷ்மி, தேன்மொழி ஆகியோர் முதலிடமும், ஒற்றையர் பிரிவில் ராஷ்மி 2ம் இடத்தையும் பெற்றுள்ளார். 19 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான இறகுப்பந்து இரட்டையர் மற்றும் ஒற்றையர் பிரிவுகளில், மூன்றாம் இடமும், 14 மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான இரட்டையர் மற்றும் ஒற்றையர் பிரிவில் இரண்டாம் இடமும், 17வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான பூப்பந்து போட்டிகளில் 3ம் இடத்தையும் பெற்றனர்.
முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும், ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வேடியப்பன், தாளாளர் சாந்தி வேடியப்பன், நிர்வாக இயக்குனர் தமிழ்மணி, பவானி தமிழ்மணி, முதல்வர்கள் சாரதி மகாலிங்கம், ஜான் இருதயராஜ் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

Tags : school students ,
× RELATED நிகேதன் பாடசாலை பள்ளி மாணவர்கள்; நீட் தேர்வில் சாதனை