×

உப்பிடமங்கலம் பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி

கரூர், அக்.24:  உப்பிடமங்கலம்பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பேரூராட்சி அலுவலர்கள் வீடுவீடாக சென்று மழைநீர் தேங்கியுள்ளதா என ஆய்வு செய்து அதனை அகற்றினர்.திறந்தவெளியில் உள்ள பொருட்களில் பழையடயர்கள், தேங்காய்சிரட்டைகள், பாலிதீன்கவர்கள், வீடுகளில் உள்ள உரல்கள், ஆட்டுக்கல், ஆகியவற்றில் மழைநீர் தேங்கவிடாதுபார்த்துக்கொள்ளவேண்டும். தேங்கியநீரை உடனடியாக அகற்றி விடவேண்டும். அகற்றாவிட்டால் 3நாட்களில் அந்த நீரில் டெங்கு பரப்புகின்ற கொசு உருவாகிவிடும். இந்த கொசு கடித்தால் காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. அவரவர் பகுதியில் உள்ள சாக்கடைகளில் பிளாஸ்டிக் கவர்கள்அடைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சாக்கடை அடைத்திருந்தால் உடனடியாக பேரூராட்சிக்குதகவல் தெரிவித்தால் உடனடியாக சுத்தம் செய்யப்படும். சாக்கடையில்கொசு உற்பத்தியாகாமல் இருக்க கொசுமருந்து அடிக்கப்பட்டுவருகிறது என பேரூராட்சி செயல்அலுவலர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.


Tags : Uppidamangalam ,
× RELATED உப்பிடமங்கலம் பேரூராட்சியில்...