×

குஜிலியம்பாறை குழாயில் நீர்க்கசிவு ஆறு மாதமாக ஆறாய் ஓடுது குடிநீர்-தட்டுப்பாட்டிலும் தொடரும் அலட்சியம்

குஜிலியம்பாறை : குஜிலியம்பாறையில் காவிரி குடிநீர் குழாயில் நீர்க்கசிவு ஏற்பட்டு, ரோட்டில் குடிநீர் ஆறாய் ஓடி வீணாகி வருகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.கரூர் காவிரி ஆற்றுப்பகுதியில் கடந்த 2005ம் ஆண்டு ராட்சத கிணறு அமைக்கப்பட்டு, அதிலிருந்து ராட்சத குழாய்கள் மூலம் கரூர், ஜெகதாபி, பாளையம், குஜிலியம்பாறை, கோவிலூர், வேடசந்துர், ஆகிய பகுதிகளின் வழியாக ஒட்டன்சத்திரம் நகருக்கு காவிரி கூட்டு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில், குஜிலியம்பாறையில் உள்ள பேரூராட்சி அலுவலகம் செல்லும் மெயின் சாலையில் காவிரி குடிநீர் குழாயில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு நீர்க்கசிவு ஏற்பட்டது. லேசாக ஏற்பட்ட கசிவு நாளடைவில் சாலையின் பக்கவாட்டில் நீரோடை போல் ஓடி வருகிறது. இதனால் குடிநீர் முழுவதும் சாலையில் வீணாகி வருகிறது. மேலும், நீர்க்கசிவு ஏற்பட்ட இடத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. காவிரி குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவு குறித்து மாவட்ட குடிநீர் வடிகால் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்ைல. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும், என்றனர்….

The post குஜிலியம்பாறை குழாயில் நீர்க்கசிவு ஆறு மாதமாக ஆறாய் ஓடுது குடிநீர்-தட்டுப்பாட்டிலும் தொடரும் அலட்சியம் appeared first on Dinakaran.

Tags : Kujilyambara ,Gujiliyambara ,Kaviri ,Kujiliyambara ,
× RELATED எடப்பாடி முதல்வராக இருந்தபோது அவரது...