×

தீயணைப்புத்துறையினர் விளக்கம் தேனி மாவட்டத்தில் ரெட் அலர்ட்டால் பாதிப்பில்லை

தேனி, அக். 23: தேனி மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்த ரெட் அலர்ட்படி தேனி மாவட்டத்தில் பெரிய அளவில் மழை பெய்யாததால் எந்த பாதிப்பும் இல்லை. மழை பெய்யாததால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.சென்னை வானிலை ஆராய்ச்சி மையத்திலிருந்து நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரத்தில் அக்டோபர் 22 மற்றும் 23ம் தேதிகளில் கனமழை பெய்யும் என ரெட் அலாட் விடுக்கப்பட்டது. இதையடுத்து சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தேனி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விட்டிருந்தாலும் தேனி மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவ் பள்ளி, கலலூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியிடவில்லை. ரெட் அலர்ட் விடுத்த நாளான நேற்று முன்தினம் மாலை வரை மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பெய்தது. நேற்று காலை முதல் மாவட்டத்தில் மழை பெய்யவில்லை. இதனால் பள்ளிக்கு விடுமுறை விடுப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மழை பெய்யாததால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கபபடவல்லை. இதனால் பெற்றோர் பள்ளிகளுக்கு குழந்தைகளை நேற்று சற்று தமதமாகவே பள்ளிக்கு அனுப்பினர்.
 

Tags : Firefighters ,Theni district ,
× RELATED கோம்பை பகுதியில் வாகன...