×

பழுதாகி நின்ற லாரி மீது லாரி மோதி கிளீனர் பலி

திருமங்கலம், அக்.23: கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு வெங்காய மூட்டைகளை ஏற்றிக்கொண்டு நேற்று நண்பகல் 12 மணியளவில் லாரி சென்றது. மதுரை விருதுநகர் நான்கு வழிச்சாலையில் கள்ளிக்குடி சிவரக்கோட்டை அருகே சென்ற போது லாரியின் பின்பக்க டயர் பஞ்சரானது. இதனால் லாரியை நிறுத்தி டிரைவர் ரஞ்சீத்குமார்(30), கிளீனர் தர்மபுரியை சேர்ந்த சக்திவேலு(23) மாற்று டயர் மாற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது திருமங்கலத்திலிருந்து நெல்லை நோக்கி சென்ற டிப்பர் லாரி பழுதாகி நின்ற லாரியின் பின்பக்கத்தில் மோதியது. இதில் டிப்பர் லாரியின் முன்பகுதி நொறுங்கவே அதனை ஓட்டி வந்த கரூரை சேர்ந்த டிரைவர் சக்திவேலு(52) வண்டிக்குள் சிக்கிகொண்டார். டயரை மாற்றிய வெங்காய லோடு லாரியின் டிரைவர் ரஞ்சித்குமார், கிளினர் சக்திவேலு படுகாயமடைந்தனர். கள்ளிக்குடி போலீசார் மற்றும் விருதுநகர் தீயணைப்பு படையினர் வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் டிப்ப ர்லாரியின் டிரைவரை மிகவும் சிரமப்பட்டு தீயணைப்பு படையினர் மீட்டனர். மீட்கப்பட்ட மூவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிளீனர் சக்திவேலு உயிரிழந்தார். மற்ற இருவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Lorry ,
× RELATED மனைவியுடன் தொடர்பு வைத்ததால்...