×

குன்னம் ஊராட்சியில் டெங்கு தடுப்பு நடவடிக்ைக ஆய்வு சுற்றுப்புறங்களை பொதுமக்கள் தூய்மையாக பராமரிக்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்

பெரம்பலூர்,அக்.23: குன்னம் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பெரம்பலூர் கலெக்டர் சாந்தா ஆய்வு செய்து பொதுமக்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மழைக் காலங்களில் பரவும் நோய்களான டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களிலிருந்து பொதுமக்களைக் காப்பாற்றும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் குன்னம் ஊராட்சியில் குடியிருப்புகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேற்க்கொள்ளப்பட்டு வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பெரம்பலூர் கலெக்டர் சாந்தா நேற்று(22ம்தேதி) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின் போது கலெக்டர் சாந்தா குடியிருப்புப் பகுதிகள், குடியிருப்புகளில் வாகனங்கள் நிறுத்துமிடம், தண்ணீர் பிடித்து வைக்கும் பாத்திரங்கள் உள்ளிட்டவைகள் முறையாக சுத்தம் செய்யப்படு கிறதா, மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளைச்சுற்றி மழைநீர் தேங்கியுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்கள் மற்றும் தொட்டிகளை 3நாட்களுக்கு ஒரு முறை பிளீச்சிங்பவுடர் கொண்டு கழுவி உலர வைத்துப்பின்னர் தண்ணீர் பிடிக்க வேண்டும். தண்ணீரை நன்றாக மூடி வைக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் கொசு தண்ணீரில் முட்டையிடாமல் தடுக்கமுடியும். பிளிச்சிங் பவுடர் கொண்டு மேல்நிலைநீர்த்தேக்கத் தொட்டி களை சுத்தம் செய்வதால், தொட்டிகளில் உள்ள பாசிகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் கொசுவின் முட்டைகள் அழிக்கப்படும். எனவே பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு, தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள பிளாஸ்டிக், உடைந்த மண்பானைகள் மற்றும் பயன்படுத்தாத டயர்கள் உள்ளிட்டவைகளில் மழைநீர் தேங்காமல் அவற்றை அகற்றி, தங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும் குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்டக் கலெக்டர் சாந்தா மருத்துவர்களிடம் பொதுமக்களுக்குத் தேவையான மருந்துகள் இருப்பு உள்ளதா என்றும், மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் போதுமான வகையில் இரு க்கிறதா என்றும் கேட்டறிந்தார். மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் சுற்றுப்புறங்களை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும், மருத்துவமனைகளுக்கு வருகைதரும் நோயாளிகளுக்கு தேவையான இருக்கை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.பின்னர் குன்னம் நியாய விலைக்கடையில் பொது மக்களுக்கு வினியோகிக்கப்படும் உணவுப்பொருட்களின் அளவு குறித்தும், குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை குறித்தும், குடும்ப அட்டைதாரர்களுக்கு முறையாக உணவுப்பொருட்கள் வழங்கப்படுகின்றனவா என்பது குறித்தும் பதிவேடுகளை கொண்டு ஆய்வு மேற்கொண்டார். குன்னம் தாசில்தார் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வுப் பணி மேற்கொண்ட போது முதலமைச்சர் தனிப்பிரிவிலிருந்து பெறப்படும் மனுக்கள் குறித்த பதிவேட்டினை ஆய்வு செய்தார்.ஆய்வுகளின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜராஜன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலு வலர் கங்காதேவி, குன்னம் தாசில்தார் சித்ரா, வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மரியதாஸ் உடனிருந்தனர்.

Tags : Investigation ,Kunnam Panchayat ,
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...