×

100 நாட்களாக சீரமைக்கப்படாத சாக்கடை கால்வாய் பாலம்

காங்கயம், அக். 23: காங்கயம் நகராட்சியில் புதியதாக கட்டிய சாக்கடை கால்வாய்  பாலம், 15 நாட்களில் சேதமானது. ஆனால் 100 நாட்கள் ஆகியும் சீரமைக்காததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். காங்கயம் - கோவை சாலையில் இருந்து எஸ்.ஜி.எஸ் காலனி வழியாக பஸ் நிலையம் செல்லும் சாலையில், சாக்கடை கால்வாய் பகுதியில் பாலம் பழுதடைந்தது. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நகராட்சியின் பொதுநிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் நிதி ஒதுக்கி புதியதாக சாக்கடை கால்வாய்  பாலம் கடந்த ஜூன் மாதம் கட்டப்பட்டது. ஆனால் கட்டிய 15 நாட்களில் பாலம் சேதமானது.

கட்டுமான பணியில் தரமான பொருட்கள் பயன்படுத்தப்படாததால் 15 நாட்களுக்குள் பாலம் உடைந்ததாக பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. தற்போது பாலம் உடைந்து 100 நாட்கள் ஆகியும் சாக்கடை கால்வாய்  பாலம் சீரமைக்காமல் உள்ளனர். இதனால் கோவை -திருச்சி சாலை, காங்கயம் போலீஸ் ரவுண்டான பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது, இச்சாலை வழியாக கார், இரு சக்கர வாகனங்கள் பஸ் நிலையம் வரை செல்ல பயன்படுத்தப்படுகிறது. தற்போது பாலம் சீரமைக்கப்படாமல் உள்ளதால், போக்குவரத்து நெரில் ஏற்பட்டு வாகன ஓட்டுநர்கள் அவதியடைந்து வருகின்றனர். நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் உடனடியாக புதிய பாலம் அமைக்க பணிகளை துவக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : sewer bridge ,
× RELATED வெங்கமேடு சாலையில் சேதமான கழிவுநீர் வடிகால் பாலம்