×

கடத்தூர் பகுதியில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரம்

கடத்தூர், அக்.23: கடத்தூர் பேரூராட்சி சார்பில் ேநற்று தீவிர டெங்கு ஒழிப்பு பணி நடந்தது.இதில் ரங்கசாமி தெருபகுதியில் உள்ள வீடுகளில் ேபரூராட்சி பணியாளர், 20க்கும் மேற்பட்டோர், வீடு, வீடாக சென்று டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுகள் உள்ளதா என ஆய்வு செய்தனர். கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த, வீடு, கடை, வணிக நிறுவனங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து, எச்சரிக்கை செய்தனர்.காய்ச்சல் பாதிப்பை தடுக்க, பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினர். இந்த ஆய்வின் போது, பேரூராட்சி செயல் அலுவலர் ராஜாஆறுமுகம், இளநிலை உதவியாளர் மோகன், செந்தில் மற்றும் ேபரூராட்சி ஊழியர்கள் உடனிருந்தனர்.

Tags : Kadathur ,
× RELATED குழந்தையுடன் தாய் மாயம்