×

உலக சிக்கன தினத்தை முன்னிட்டு அரசு பள்ளியில் கலை போட்டி

ஈரோடு, அக். 23:  ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று உலக சிக்கன தினத்தை முன்னிட்டு மாணவ-மாணவிகளிடம் சிக்கனம் மற்றும் சேமிக்கும் பண்பினை வளர்க்கும் விதமாக மாவட்ட அளவிலான கலை போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில், கல்வி மாவட்டம் வாரியாக கடந்த 18ம் தேதி நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, நடனம், நாடக போட்டியில் தகுதி பெற்ற அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நேற்று மாவட்ட அளவிலான பேச்சு, கட்டுரை, நடனம், நாடக போட்டி நடந்தது.

இந் நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி தலைமையாசிரியை சுகந்தி தலைமை தாங்கினார். இப் போட்டி 6-8ம் வகுப்பு, 9-10ம் வகுப்பு, 11-12ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மூன்று பிரிவாக நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Tags : Art competition ,government school ,World Austerity Day ,
× RELATED கொடைக்கானல் அரசு பள்ளி மாணவர் பல் மருத்துவத்தில் சேர்ந்தார்