×

பாசன பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

ஈரோடு, அக். 23: பாசன பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறையினர் உடனடியாக அகற்ற வேண்டும் என ஈரோடு ஆர்டிஒ முருகேசன் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு கோட்ட அளவில் நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்திற்கு தலைமை தாங்கி அவர் பேசியதாவது:
பாசன பகுதிகளில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை காலதாமதம் இன்றி உடனடியாக அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்றுவதில் ஏதாவது சிக்கல் இருந்தால் மட்டும் வருவாய்துறையினரின் உதவியை நாட வேண்டும். இதேபோல் உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறையினர் தங்களுக்கு சொந்தமான இடங்களாக இருந்தால் சம்மந்தப்பட்ட துறையினரே அகற்ற முன்வர வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்ற வருவாய்துறையினரை எதிர்பார்க்க வேண்டியதில்லை.

குறிப்பாக, நீர்நிலை ஆக்கிரமிப்புகளாக இருந்தால் தாமதிக்காமல் உடனடியாக அகற்ற வேண்டும். இதேபோல், டெங்கு கொசு ஒழிப்பு பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் குடியிருப்புகள் இருந்தால் சம்மந்தப்பட்ட வீட்டின் குடிநீர் இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிற்சாலைகளில் விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க வேண்டும். டெங்கு ஒழிப்பு பணியில் அதிகாரிகள் அலட்சியமாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முருகேசன் பேசினார்.

Tags : areas ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...