கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, அக். 23:  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு ஈவிஎன் ரோட்டில் உள்ள மண்டல தலைமை மின் பொறியாளர் அலுவலக நுழைவு வாயிலில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூபெற்றோர் நல அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் குழந்தசாமி தலைமை தாங்கினார். சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில செயலாளர் ஜோதிமணி, மாநில தலைவர் சின்னசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். இதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மின்வாரிய வைரவிழா சலுகைகளை 1-12-2015ம் ஆண்டிற்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கும் வழங்க வேண்டும்.

ஒப்பந்த சொசைட்டி தொழிலாளர்களின் ஒப்பந்த பணிக்காலத்தை சேர்த்து ஓய்வூதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை கலைய வேண்டும். மின்வாரியம் பொதுத்துறையாகவே நீடிக்க வேண்டும். தர ஊதியம் 6வது ஊதியக்குழு பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியது போல 2006ம் ஆண்டிற்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கும் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Stories:

>