×

ஒட்டன்சத்திரத்தில் துப்பாக்கி வழக்கில் 4வது நபரும் கைது

ஒட்டன்சத்திரம், அக். 18: ஒட்டன்சத்திரத்தில் துப்பாக்கியுடன் திரிந்த வழக்கில் 4வது நபரும் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்தவர் விவின் (18). ஒட்டன்சத்திரம் காந்திநகரை சேர்ந்தவர் பிரகாஷ் (27). சத்திரப்பட்டி வேலூரை சேர்ந்தவர் செல்வராஜ் (47). இவர்கள் மூவரும் கடந்த ஆக.19ம் தேதி ஒட்டன்சத்திரம் காந்திநகரில் சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்தனர். ஒட்டன்சத்திரம் போலீசார் 3 பேரையும் பிடித்து சோதனை செய்ததில் கைத்துப்பாக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் தாராபுரத்தை சேர்ந்த சக்திவேலை தேடி வந்தனர். இந்நிலையில் போலீசார் சக்திவேலையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags :
× RELATED கொரோனாவுக்கு முதியவர் பலி