×

திண்டுக்கல்லில் அனுமதியில்லாத வழித்தடம் 6 மினி பஸ் மீது வழக்கு

திண்டுக்கல், அக். 18: திண்டுக்கல்லில் அனுமதியில்லாத வழித்தடத்தில் இயக்கப்பட்ட 6 மினி பஸ் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திண்டுக்கல் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான அதிகாரிகள் ஆர்எம் காலனி பகுதியில் அதிரடி வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த 6 மினி பஸ்களை நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில் மினி பஸ்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்காமல் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்டது தெரிந்தது. இதையடுத்து ஆய்வாளர், 6 மினி பஸ்களின் உரிமையாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தார். மேலும் ஆய்வாளர், இனி வரும்காலங்களில் இதுபோல் விதிமுறைகளை மீறி மினி பஸ்களை இயக்கினால் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

Tags : Route 6 ,Dindigul ,
× RELATED இருசக்கர வாகனத்தில் சென்றவரை தாக்கிய...