×

காலாவதியான அஞ்சல் பாலிசிகளை புதுப்பிக்க டிசம்பர் 31 வரை அவகாசம்

தர்மபுரி, அக்.17: காலாவதியான அஞ்சல் பாலிசிகளை புதுப்பிக்க சிறப்பு கால அவகாசம் வரும் டிசம்பர் 31ம் தேதி வரை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீஹரி தெரிவித்திருப்பதாவது:  தபால்துறையின் வாடிக்கையாளர்கள் தங்களது அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசிகள் தொடர்ந்து 5 வருடம் பிரீமியம் கட்டாமல் காலாவதியாக இருந்தால் அதை புதுப்பிக்க சிறப்பு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் தங்களது உடல் தகுதி சான்றை அரசு மருத்துவரிடம் பெற்று இதுவரையில் செலுத்தாமல் இருந்த நிலுவை பிரீமியம் தொகையை வட்டியுடன் செலுத்தி புதுப்பித்துக் கொள்ளவும். இந்த சலுகையை பெற அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுக வேண்டும். இந்த சிறப்பு சலுகை டிசம்பர் 31ம் தேதி வரை மட்டுமே ஆகும். வரும் 2020ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்கு பிறகு இந்த வசதி கிடையாது. இவ்வாறு தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED ராஜஸ்தான் மாநிலத்தில் அக்டோபர் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு