×

தொழில் பழகுநர் திட்டத்தின்கீழ் பதிவு செய்யாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

ஈரோடு, அக். 16: தொழில் பழகுநர் திட்டத்தின்கீழ் பதிவு செய்யாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட திறன் வளர்ச்சி அலுவலர் மனோகர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தால் தொழில் பழகுநர் பயிற்சி திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி தொழில் பழகுநர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  
APPRENTICESHIP PAKHWADA என்ற திட்டத்தின்கீழ் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறு, குறு மற்றும் பெரும் தொழில் நிறுவனங்கள், உணவகங்கள், மருத்துவமனைகள் மற்றும் ஜவுளிக்கடைகள் போன்ற அனைத்து நிறுவனங்களும் தங்களது நிறுவனத்தை APPRENTICESHIP PORTAL-ல் கொடுத்துள்ளது.

அதன்படி, தகுதியுள்ள ஐடிஐ பயிற்சி முடித்த பயிற்சியாளர்களை தொழில் பழகுநர்களாக சேர்த்து 100 சதவீத இடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும், https://apprenticeship.gov.in/pages/apprenticeship/-Establishment Registration என்ற இணையதள முகவரில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தொழில் பழகுநர் சட்டப்படி 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்ட நிறுவனங்கள், தொழில் பழகுநர் திட்டத்தின்கீழ் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தொழில் பழகுநர் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையும் வழங்க வேண்டும். தொழில் பழகுநர் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்து தொழில் நிறுவனங்களும் தொழில் பழகுநர் திட்டத்தில் பதிவு செய்து சட்ட நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ள ஈரோடு மாவட்ட திறன் வளர்ச்சி அலுவலர் மனோகர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : companies ,
× RELATED சலுகை அனுபவிக்க வருவாயை குறைத்து...