இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி தற்காலிகமானது

அரியலூர்,அக்.16: இந்திய பொருளாதார வீழ்ச்சி தாற்காலிகமானது தான் என இல.கணேசன் கூறினார்.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன் அளித்த பேட்டி:மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பற்றி சீமான் பேசியது ஆபத்தானது. இறந்தவர் தனி நபர் அல்ல, அவர் நாட்டின் பிரதமர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரையும் விடுதலை செய்வது ஆளுநரின் கையில் உள்ளது.இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி தற்காலிகமானது தான் விரைவில் சரி செய்யப்படும். இந்தியா-சீனா பிரதமர்கள் சந்தித்து பேசியதையடுத்து இரு நாட்டுகளின் பொருளாதாரம் வளர்ச்சியடையும். இரு நாட்டு உறவுகள் வலுபெறும். தமிழ்நாடு பாஜக தலைவர் மட்டுமல்ல டிசம்பர் மாதத்தில் அனைத்து மாநிலங்களிலும் பாஜக தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். பாஜக அதிமுக கூட்டணி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது என்றார்.


Tags : Indian ,
× RELATED அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய...