×

கொல்லாபுரம் கிராமத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை ஆய்வு

அரியலூர், அக். 15: அரியலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார். அரியலூர் மாவட்டம் கொல்லாபுரம் கிராமத்தில் ஊராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் நடந்து வருவதை கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், அரசு மருத்துவமனைகளுக்கு காய்ச்சலுடன் வரும் நோயாளிகளின் முகவரி சேகரிக்கப்பட்டு அவர்களின் வீடு மற்றும் சுற்றுப்புறங்களை கண்காணிக்க பொது சுகாதாரத்துறையுடன் நகராட்சி மற்றும் ஊராட்சி துறை பணியாளர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் அரியலூர் மாவட்டம் முழுவதும் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. தண்ணீர் தேங்கி கொசுப்புழு உற்பத்தியாக காரணமாக அமையும் இடங்கள் கண்டறியப்பட்டால் உரிமையாளர்களிடம் அபராதத்தொகை வசூலிக்கப்படும் என்றார். இதைதொடர்ந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் உள்ள காய்ச்சல் பிரிவில் உள்நோயாளிகளை பார்வையிட்டு அவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ பரிசோதனை குறித்து கேட்டறிந்தார். பின்னர் காவனூரில் உள்ள புது ஏரி மற்றும் அம்பாபூர் கிராமத்தில் உள்ள செங்கட்டையான் ஏரிகளில் நடந்து வரும் குடிமராமத்து பணிகளை கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார். ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஹேமசந்த் காந்தி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் பழனிசாமி உடனிருந்தனர்.

Tags : Kolhapuram ,village ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...