×

பர்கூர் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த துப்புரவு முகாம்

கிருஷ்ணகிரி, அக்.15: பர்கூர் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கும் வகையில், தீவிர துப்புரவு முகாம் நடைபெற்றது. இதில், துப்புரவு ஊழியர்கள் ஒன்றிணைந்து வீதி வீதியாக சென்று, துப்புரவு பணிகளை மேற்கொண்டனர். புதர்மண்டி கிடந்த பகுதியை சீர்செய்து, பழைய டயர் மற்றும் தேங்காய் சிரட்டை, பிளாஸ்டிக் கப்புகளை அப்புறப்படுத்தினர். குறிப்பாக 9வது வார்டு எம்ஜிஆர் நகர் பகுதியில் வசித்து வரும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. அத்துடன் கொசு ஒழிப்பு புகை அடிக்கப்பட்டது. மேலும், டெங்கு கொசு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, 11வது வார்டு பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளி தெருவில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தர்மபுரி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஜீஜாபாய் மேற்பார்வையில் நடந்த இம்முகாமில், பேரூராட்சி செயல் அலுவலர் சாம் கிங்ஸ்டன், தலைமை எழுத்தர் வெங்கடாஜலம், இளநிலை உதவியாளர் சாமுண்டீஸ்வரி, சுகாதார மேற்பார்வையாளர் விஜயகுமார், மின் பணியாளர் மாதேஸ், அலுவலக பணியாளர்கள், மஸ்தூர் பணியாளர்கள், சுய உதவிக்குழு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags : sanitation camp ,Burgur Beirut ,
× RELATED ஆத்தூர் நகராட்சி சார்பில் ஒருங்கிணைந்த துப்புரவு முகாம்