மதுரை: மருத்துவ மாணவர் சேர்க்கையில், ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை வழங்கக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்து நீதிபதிகள் என்.கிருபாகரன் (ஓய்வு), பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு தனி ஒதுக்கீடு வழங்கப்படாதது அதிர்ச்சியளிக்கிறது. ஓய்வு பெற்ற படைவீரர்களின் வாரிசுகளுக்கு 11 சீட்டுகள் ஒதுக்கப்படுகின்றன. இது போதுமானதாக இல்லை. ஆந்திரம், கர்நாடகம், கேரளா, தெலங்கானாவில் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கும் எம்பிபிஎஸ் சீட்டுகள் ஒதுக்கப்படுகின்றன. தமிழகத்திலும் அடுத்த கல்வியாண்டிலிருந்து 1% இடம் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். முன்னுரிமை பட்டியலை 12 வாரத்தில் ஒன்றிய அரசு மாற்றியமைக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்….
The post மருத்துவ மாணவர் சேர்க்கையில் பணியில் உள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கும் இட ஒதுக்கீடு: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து appeared first on Dinakaran.