குவிந்து கிடக்கும் குப்பையால் ஓசூர் நகராட்சியில் சுகாதார சீர்கேடு

ஓசூர், அக்.10: ஓசூர் நகராட்சி பகுதியில், தேங்கி கிடக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு அபாயம் நிலவுகிறது.  ஓசூர் நகராட்சிக்கு உட்பட்ட முக்கண்டபள்ளி எம்ஜிஆர் நகரில், நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அதிக தொழிற்சாலைகள் நிறைந்த இப்பகுதியில், நேற்று முன்தினம் ஆயுத பூஜை ெகாண்டாடபட்டது. பூஜை முடித்து அடுத்த நாள் பல்வேறு பகுதிகளில் இருந்து நகராட்சி பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டி கிடக்கிறது. அதில் பூஜைக்கு பயன்படுத்தப்பட்ட அழுகிய பொருட்கள் மலை போல் கொட்டப்பட்டுள்ளது.

இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது. அதேபோல், மூக்கண்டப்பள்ளி பகுதியிலும் பல நாட்களாக குப்பை, கழிவுகள் கொட்டப்பட்டு அழுகி கிடக்கிறது. இந்த குப்பையை கால்நடைகள், நாய்கள் கிளறி விடுவதால், துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கொட்டி கிடக்கும் குப்பையை நகராட்சி நிர்வாகம் அகற்றி தூய்மைபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : municipality ,Hosur ,
× RELATED பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படும்...