×

பென்னாகரத்தில் 3,000 மரக்கன்று நடும் விழா

பென்னாகரம், அக்.10:  பென்னாகரம் ேபரூராட்சியில் 3ஆயிரம் மரக்கன்று நடும் விழா நடந்தது. பென்னாகரம் தேர்வுநிலை பேரூராட்சியில், மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ், 3ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும், பேரூராட்சி பகுதி முழுவதும், தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து வணிக நிறுவனங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக்குகள், பிளாஸ்டிக் கப்புகள் என மொத்தம் 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஆய்வில், இளநிலை பொறியாளர் ஏழுமலை, தாசில்தார், இளநிலை உதவியாளர் மற்றும் அலுவலக பணியாளர்கள் பலர் ஈடுபட்டனர்.

Tags : tree planting ceremony ,Pennagaram ,
× RELATED வறுமையில் உள்ள இளம்...