×

திருத்துறைப்பூண்டியில் நகை, அடகு கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்

திருத்துறைப்பூண்டி, அக்.10: திருத்துறைப்பூண்டியில் நகை மற்றும் அடகுகடை உரிமையாளர்கள் கொள்ளையர்களிடம் இருந்து தங்கள் நிறுவனங்களை பாதுகாத்துக்கொள்ள கண்காணிப்பு கேமரா பொருத்த வலியுறுத்தப்பட்டது. திருவாரூர் மாவட் டம் திருத்துறைப்பூண்டியில் நகை மற்றும் அடகு கடை உரிமையாளர்கள் திருடர்களிடம் இருந்து தங்கள் நிறுவனங்களை பாதுகாத்து கொள்வது குறித்து நகை மற்றும் அடகு கடை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் காவல்துறை சார்பில் டிஎஸ்பி அலுவலகத்தில் நடந்தது. போலீஸ் டிஎஸ்பி பழனிச்சாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் திருத்துறைப்பூண்டி அன்பழகன், கோட்டூர் அறிவழகன், சப் இன்ஸ்பெக்டர்கள் தேவதாஸ், ஆலிவலம் பிரபு, நகைக்கடை உரிமையாளர்கள் ஆதப்பன், பன்னீர்செல்வம், நாராயணமூர்த்தி, சற்குணநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில்,  தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் வணிக நிறுவனங்களில் திருட்டு சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே இத்தகைய திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும்,  திருட்டுச் சம்பவங்களில் இருந்து தங்கள் கடைகளை எப்படி பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.  மேலும் நகைகடை, அடகு கடை உரிமையாளர்கள் தங்கள் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், அலாரம் செட் செய்யவும், வாட்ச்மேன் நியமிக்கவும், இரவு நேரங்களில் ஷிப்ட் முறையில் காவல் பணியில் பணியாளர்கள் ஈடுபடுத்த வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.

Tags : jewelery ,shops ,Tiruppur ,
× RELATED திருப்பூரில் பெட்ரோல் பங்கில்...