×

அரசு ஊழியர்களுக்கு சம்பள பட்டுவாடா ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் குமரியில் அமல் அதிகாரி ஆய்வு

நாகர்கோவில், அக்.10:  தமிழக அரசு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்திட தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. ந்தியாவிலேயே முதன் முறையாக மாநிலத்தின் நிதி மேலாண்மை மற்றும் மனிதவள மேலாண்மையை ஒருங்கிணைத்து அரசு நிர்வாகத்தை மேம்படுத்தும் பொருட்டு, தமிழக அரசு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது.இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் அரசின் நிதி நிர்வாகம் மற்றும் வரவு, செலவு குறித்த விபரங்களை நிகழ் நேரத்தில் அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் அரசின் நிதி நிர்வாகம் மிகத்துல்லியமாக நடத்த இயலும். அரசு பணியாளர்களை மிகச் சிறப்பாக மக்கள் சேவைக்கு பயன்படுத்தலாம்.இத்திட்டத்தின் மூலம் 9 லட்சம் அரசுப் பணியாளர்கள் மற்றும் 8 லட்சம் ஓய்வூதியர்களும் பயனடைவர். இத்திட்டம் மாநிலக் கணக்காயர் அலுவலகம், வருமான வரித்துறை, இந்திய ரிசர்வ் வங்கி, முகமை வங்கிகள் மற்றும் அரசின் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக இத்திட்டம் செப்டம்பர் 1 முதல் கரூர் மாவட்டத்திலும், அக்டோபர் 1 முதல் கன்னியாகுமரி மாவட்டம் உட்பட 6 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.  

இது தொடர்பான ஆய்வுக் கூட்டம் முதன்மைச் செயலர் மற்றும் கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையர்  தென்காசி ஜவஹர் தலைமையில் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே முன்னிலையில் நடைபெற்றது. இந்த திட்டம் குமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் விதம் குறித்து ஆய்வு நடத்தி இது குறித்த தொடர் நடவடிக்கைகள் தொய்வின்றி மேற்கொள்ள முதன்மை செயலர் மற்றும் ஆணையர் அறிவுரை வழங்கி ஜவஹர் பேசியதாவது:குமரி மாவட்டத்தில்  கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.56,48,89,638 சம்பளமாக கருவூலங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 30,352 ஓய்வூதியர்களுக்கு ரூ.84,06,26,945 ஓய்வூதியமாக வழங்கப்பட்டுள்ளது. சம்பளமில்லா பட்டியல்கள் மற்றும் முதியோர் ஓய்வூதியம், முத்துலட்சுமிரெட்டி மகப்பேறுத் திட்டம் போன்ற அரசின் திட்டங்கள் வாயிலாக ரூ.185,02,57,427 செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே, நடைமுறையில் உள்ள  திட்டங்களில் பட்டியல் தயாரித்து பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைப்பதற்கு 8 முதல் 12 நாட்கள் வரையாகிறது.

ஆனால், இப்புதிய திட்டத்தில், ஒரேநாளில் பட்டியலை தயாரித்து, இணையம் வாயிலாக கருவூலத்தில்சமர்ப்பித்து, பயனாளியின் வங்கி கணக்கில் உடனடியாக வரவு வைக்க இயலும். நிதி மற்றும் மனிதவள மேலாண்மையில் வெளிப்படை தன்மையுடன் துரித சேவையை மக்களுக்கு வழங்க இயலும். இவ்வாறு அவர் தெரிவித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மெர்சி ரம்யா, திட்ட ஒருங்கிணைப்பு அலுவலரான மதுரை சம்பள கணக்கு அலுவலர் முத்துப்பாண்டியன், திருநெல்வேலி மண்டல இணை இயக்குநர் பாத்திமா சாந்தா, குமரி மாவட்ட கருவூல அலுவலர் பெருமாள், கன்னியாகுமரி  மாவட்டத்திலுள்ள அனைத்துக் உதவி கருவூல அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் அரசு பணியாளர்களும் கலந்துகொண்டனர்.

Tags : Amalgamated ,Kumari ,Human Resources Management Program for Government Employees ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...