×

சத்திரமனை கிராமத்தில் மூதாட்டியிடம் ஏழரை பவுன் நகைகளை பறித்து சென்ற டவுசர் கொள்ளையர்கள் போலீசார் விசாரணை

பெரம்பலூர், அக். 9: சத்திரமனை கிராமத்தில் மூதாட்டி கழுத்தில் அணிதிருந்த ஏழரை பவுன் தாலிக்கொடியை பறித்து சென்ற டவுசர் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். பெரம்பலூர் அருகே உள்ள சத்திரமனை கிராமம் அண்ணா தெருவில் வசிப்பவர் செங்கமலை மனைவி பூஞ்சோலை (72). இவர் தனது மூத்த மகள் தங்கமணியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று நேற்று முன்தினம் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது பூஞ்சோலை அதிகாலை 2 மணியளவில் வீட்டுக்கு வெளியே எழுந்து சென்று பாத்ரூம் சென்று விட்டு மீண்டும் வீட்டுக்குள் வந்தவர் மறதியில் கதவை சாத்தவில்லை. அப்போது நடுத்தெருவில் உலவி கொண்டிருந்த 2 மர்மநபர்கள், பூஞ்சோலை வெளியே வந்து செல்வதை நோட்டம் விட்டு பார்த்து கொண்டிருந்தனர். பின்னர் பூஞ்சோலை உள்ளே செல்லும்போது இருவரும் சத்தமின்றி பூஞ்சோலையின் வீடு வரை வந்துள்ளனர்.

அதில் பூஞ்சோலை வீட்டின் கதவு சாத்தாமல் இருப்பதை அறிந்ததால் அந்த 2 பேர்களில் ஒருவன் வாசலில் காவலுக்கு நின்று தெருவில் ஆட்கள் நடமாட்டம் உள்ளதா என நோட்டம் விட்டு கொண்டிருக்க மற்றொருவன் வீட்டுக்குள் நுழைந்து பூஞ்சோலை கழுத்தில் இருந்த ஏழரை பவுன் தாலி கொடியை பறித்தார். பின்னர் 2 மர்மநபர்களும் அருகில் இருந்த காட்டுக்குள் ஓடி விட்டனர். அப்போது பூஞ்சோலை சத்தம் போட்டதும் உறவினர்கள், பொதுமக்கள் எழுந்து கொள்ளையர்களை பிடிக்க முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் அழகேசன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். நகை கொள்ளையில் ஈடுபட்ட 2 திருடர்களும் டவுசம் மட்டும் அணிந்திருந்தனர். மேல் சட்டை அணியாமல் இருந்தன, இருவருக்கும் 30 வயது இருக்கும் போலீசாரிடம் பொதுமக்கள் தெரிவித்தனர்.

3 பவுன் நகை திருட்டு

பெரம்பலூர் அருகே உள்ள மேலப்புலியூர் நடுத்தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் (79). இவர் தனது வீட்டை பூட்டி விட்டு 4 நாட்களுக்கு முன் திருச்சியில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் இரவு பக்கத்து வீட்டார் போன்செய்து உங்கள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடக்கிறது என்று தெரிவித்தனர். இதையடுத்து ராமதாஸ் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 3 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வரும் சூழலில் நேற்று ஒரே நாளில் 2 ஊர்களில் கொள்ளை, திருட்டு சம்பவங்கள் நடந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : bowser ,village ,Satraman ,brother ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...