×

10,11ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆல் பாஸ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: 10 மற்றும் 11ம் வகுப்பு துணைத்தேர்வுகளை  தனித்தேர்வர்களாக  எழுத  விண்ணப்பித்துள்ள,  மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதன் காரணமாக 12ம் வகுப்பு வரையிலான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இவர்களின் முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கீடு செய்ய வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டது. இந்தநிலையில்,  தேர்வுகளில் தோல்வி அடைந்தோர் மற்றும் தனித்தேர்வர்களுக்காகத் துணைத் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி 10ம் வகுப்பு துணைத்தேர்வு செப்டம்பர் 16ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதேபோல், 11ம் வகுப்பு துணைத் தேர்வு செப்டம்பர் 15ல் தொடங்கி 30ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த துணைத் தேர்வுகளுக்கு ஆகஸ்ட் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பித்தனர். இந்தநிலையில், 10 மற்றும் 11ம் வகுப்பு துணைத்தேர்வுகளை  தனித்தேர்வர்களாக  எழுத  விண்ணப்பித்துள்ள  மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு:  செப்டம்பர் 2021ல் நடைபெறவுள்ள 10 மற்றும் 11ம் வகுப்பு துணைத்தேர்வுகளை  தனித்தேர்வர்களாக  எழுத  விண்ணப்பித்துள்ள  மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தற்போது  நிலவிவரும்  கோவிட்-19  நோய் தொற்று பரவல் காரணமாக தேர்வு எழுதுவதிலிருந்து  விலக்களித்து  அவர்கள்  அனைவரும்  தேர்ச்சி  பெற்றதாக தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.  இவ்வாறு கூறப்பட்டுள்ளது.”பேரவையில் நாளை நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம்”தமிழக அரசு விரும்பாத ஒரு நிகழ்வாகதான் நீட் தேர்வு நடக்கிறது. நாளை,  சட்டமன்ற முதல் கூட்டத் தொடரின் இறுதி நாள், அதில் நீட் தேர்வுக்கு எதிரான  தீர்மானம் முதலமைச்சரால் கொண்டு வரப்பட இருக்கிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.  சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த பின் அவர் அளித்த பேட்டி: தமிழக அரசு விரும்பாத ஒரு நிகழ்வாக தான் நீட் தேர்வு நடக்கிறது. நாளை சட்டமன்ற முதல் கூட்டத் தொடரின் இறுதி நாள், அதில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் முதல்வரால் கொண்டுவரப்பட உள்ளது.அந்த தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பி போதுமான அளவுக்கு அழுத்தமும் தரப்படும். இன்று நடக்க இருக்கும் நீட் தேர்வில் மென்மையான போக்கு கடைப்பிடிக்கப்படும். கடந்த முறை நடந்தது போல், மிக கடுமையான போக்கை காட்டி, மாணவர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்காமல் மிக மென்மையான போக்கிலே நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்….

The post 10,11ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆல் பாஸ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Stalin ,CM B.E. ,Dinakaraan ,
× RELATED கோடைகாலத்தில் குடிநீர் தேவையை கருதி...