×

காங்கயம், வெள்ளகோவிலில் திறந்தவெளியில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் பணி

காங்கயம்,அக்.4: காங்கயம் நகராட்சிப் பகுதியில் திறந்தவெளிப் பகுதியில் சிதறிக் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் துவக்கி வைத்துள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், காங்கயம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, நகராட்சிப் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை மகளிர் சுய உதவிக்குழு மற்றும் நகராட்சி சுகாதாரப்பணியாளர்களுடன் இணைந்து அகஸ்திலிங்கம்பாளையம் பிரிவு சாலை முதல் திருப்பூர் சாலை ஹாஸ்டல் ஸ்டாப் வரை, இல்லியம் புதூர் சாலை மற்றும் சவுண்டாம்பிகை நகர் ஆகிய பகுதிகளில் திறந்தவெளிப் பகுதியில் சிதறிக்கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் பணி நடைபெற்றது. இதில் 300 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டது.

இப்பணிகளானது நகராட்சிப் பொறியாளர் சரவணன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. தூய்மை இந்தியா ஸ்வச் சேவா திட்டத்தின் கீழ் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நகராட்சிப் பகுதியிலுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. நகராட்சி சுகாதாரப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் 70 பேர் இந்தப் பணியில் ஈடுபட்டனர். பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்பப்பட உள்ளதாக நகராட்சி கமிஷனர் சங்கர் தெரிவித்தார். துப்புரவு ஆய்வாளர் சரவணன், துப்புரவு மேற்பார்வையாளர் பழனிச்சாமி இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

Tags : Kankayam ,
× RELATED காங்கயம் கிராம பகுதிகளில் கொட்டப்படும் கேரள கழிவுகளால் அவதி