×

கடமலை மயிலை ஒன்றியத்தில் கிராமசபை கூட்டம்

வருஷநாடு, அக். 4: வருஷநாடு கிராமத்தில் ஓம்சக்தி கோவில் மண்டபத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது இதில் நெகிழிஒழிப்பது, சுகாதாரத்தைப் பேணுவது, சுற்றுப்புறத்தை பாதுகாப்பாக வைப்பது வருஷநாடு பஞ்சம்தாங்கி கண்மாய்களை பராமரிப்பு செய்வதற்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும், டெங்குவராமல் பாதுகாப்பதற்கும் வனக்குழு தேர்வு செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயப்பிரித்தா, மயிலாடும்பாறை ஆணையாளர் திருப்பதிவாசகன், ஆண்டிபட்டி வட்டாட்சியர் சந்திரசேகரன், மயிலாடும்பாறை துணைவட்டார வளர்ச்சி அலுவலர் ரதி, ஊராட்சி செயலர்முருகேசன், கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர், இதேபோல் முருக்கோடை ஊராட்சியில் நந்தநாதபுரம் கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆதிதிராவிடர் பழங்குடிநல அலுவலர் சாந்தி, தலைமை வகித்து பேசினார். மயிலாடும்பாறை ஆணையாளர் கருப்புசாமி, முன்னிலை வகித்தார் மயிலாடும்பாறை வருவாய் ஆய்வாளர் சரவணன், ஊராட்சி செயலர்பாண்டியன், முன்னாள் மயிலாடும்பாறைஒன்றியசேர்மன் தேசிங்குராஜன், கிராம முக்கியஸ்தர்கள் பால்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் தும்மக்குண்டு ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் சின்னச்சாமி, தலைமையில் கிராம சபை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மயிலாடும்பாறை ஒன்றிய ஆணையாளர் கருப்புசாமி, கிராம முக்கியஸ்தர்கள் ஜெயபாலன், நமகோடி, மணி மற்றும் பல்வேறு தொண்டு நிறுவன நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.கண்டமனூர் ஊராட்சியில் ஊராட்சிசெயலர் ராஜா தலைமையில் நடைபெற்றது. மயிலாடும்பாறை ஊராட்சியில் ஊராட்சி செயலர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது.நரியூத்து ஊராட்சியில் ஊராட்சி செயலர் ஜெயராஜ், தலைமையில், பாலூத்து ஊராட்சியில் ஊராட்சி செயலர் ஆங்கன், தலைமையில், கடமலைக்குண்டு ஊராட்சியில் ஊராட்சி செயலர் துரைப்பாண்டி தலைமையில், சிங்கராஜபுரம் ஊராட்சியில் ராமசாமி, தலைமையில், மேகமலை ஊராட்சியில் கண்ணதாசன் தலைமையில் கிராம சபை நடைபெற்றது.தொடர்ந்து 18 ஊராட்சி மன்றங்களிலும் கிராமசபை கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது அனைத்து கிராமசபை கூட்டங்களிலும் நெகிழி ஒழிப்பு பற்றி உறுதிமொழி ஏற்றனர்.Tags : Sabha ,meeting ,peacock union ,
× RELATED வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர்...