×

தேனடை போல மரங்களில் தஞ்சம் சொக்கிகுளம் பகுதியில் கம்பளிப்புழு படையெடுப்பு

மதுரை, அக்.4:  மதுரை சொக்கிகுளம் பகுதியில் உள்ள மரங்களில் தேனடை போல கம்பளிப்புழுக்கள் படையெடுப்பதால் அப்பகுதி மக்கள் பாதிப்படைந்துள்ளனர். மதுரை 42வது வார்டு சொக்கிகுளம் பகுதியில் அரசு குடியிருப்பு உள்ளது. இங்கு வேம்பு, புங்கை, பன்னீர் உள்ளிட்ட ஏராளமான மரங்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக மழை ெபய்து வருவதால், இங்குள்ள மரங்களில் சிவப்பு கம்பளிப்புழுக்கள் தேனடை போல அடைந்துள்ளன. மழை பொழிவது போல தரையில் புழுக்கள் விழுவதால், அப்பகுதியில் வசிக்கும் அரசு ஊழியர்கள் அரிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வாகனங்களிலும் ஏராளமான கம்பளிப்புழுக்கள் ஊர்வதால், அப்பகுதியில் காக்கை, மைனா உள்ளிட்ட பறவைகள் கூட்டம் இரையெடுக்க குவிந்து வருகின்றன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், `` துணி காயப்போட முடியவில்லை. அவற்றில் கம்பளிப்புழுக்கள் ஊர்வதால், அணிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் கம்பளிப்புழுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறினர்.

Tags : Caterpillar ,asylum area ,honeybees ,
× RELATED நெற்பயிரில் ஏற்படும் பூச்சி...