×

நெகிழி ஒழிப்பு பேரணி

பாடாலூர், அக்.4: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச் சூழல் மன்ற மாணவர்களின் பிளாஸ்டிக் (நெகிழி) பயன்பாட்டை தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் முருகேஸ்வரி, பள்ளியின் சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் பசுமை படை ஒருங்கிணைப்பாளர் காமராஜ் மற்றும் ஆசிரியர்கள். பயிற்சி ஆசிரியர்கள் உள்பட பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. பேரணியில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் பூமி வெப்பம் அதிகரித்து வருவது குறித்தும், சுற்றுச்சூழல் மாசு அடைவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் மாணவர்கள் கோஷங்கள் எழுப்பியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Tags : Flexibility Rally ,
× RELATED பெரம்பலூரில் செயல்படும் லால்குடி...