×

டெங்கு விழிப்புணர்வு கூட்டம்

பண்ருட்டி, அக். 2: பண்ருட்டி அருகே அண்ணாகிராமம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை வெள்ள பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கவும், கொசுவால் ஏற்படும் டெங்கு, மலேரியா, சிக்குன் குன்யா போன்றவற்றிலிருந்து விடுபடவும் முன்னெச்சரிக்கையாக விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் வசந்த் தலைமை தாங்கினார். பிடிஓக்கள் சரவணன், சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக உணவகங்கள், விடுதிகள், திருமண மண்டபங்கள், கட்டிட பணி நடைபெறும் இடங்கள், பாழடைந்த வீடுகள், வெகு நாட்களாக மூடியுள்ள வீடுகள், தொழில் நடைபெறும் இடங்கள் ஆகியவற்றில் தேவையற்ற பொருட்கள், டயர்கள், காலி டப்பாக்கள் உள்ளதை அப்புறப்படுத்த வேண்டும், மழைநீர் தேங்கியுள்ளதை அகற்ற வேண்டும், டெங்கு கொசு புழுக்கள் உருவாவதை அழிக்க வேண்டும், ஒவ்வொரு ஊராட்சியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் மாதம் இருமுறை பிளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும், தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்களை கொண்டு டெங்கு காய்ச்சல் உற்பத்தி உள்ள இடங்களில் தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சையத் ஷாஜகான் மற்றும் ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Dengue awareness meeting ,
× RELATED ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு விளக்க கூட்டம்