×

விளையாட்டு போட்டி தென்காசி இசக்கி பள்ளி மாநில அளவில் சாதனை

தென்காசி, அக். 2:   சிபிஎஸ்சி   பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டி கோவையிலும்,  குத்துச்சண்டை போட்டி சென்னையிலும் நடந்தது. தமிழகம், கேரளம், புதுச்சேரி, அந்தமான், தெலங்கானா, மஹாராஷ்ரா மாநிலங்களில் செயல்படும் 480 சிபிஎஸ்சி பள்ளிகளைச் சேர்ந்த 6,500 மாணவ,  மாணவிகள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற தென்காசி இசக்கி  வித்யாஷ்ரம் (சிபிஎஸ்சி) பள்ளி மாணவர்களில் சூப்பர் சீனியர் பிரிவில் உயரம் தாண்டுதலில் பொன் விக்ரம்  வெள்ளி பதக்கம், குத்துச்சண்டை போட்டியில் குமார் வெள்ளிபதக்கம் வென்றனர்.

ஜூனியர் பிரிவில் நீளம் தாண்டுதலில் மாணவன் ஆஸ்டின்  வெண்கல பதக்கமும், குத்துச்சண்டை போட்டியில் முகமது தவ்பீக்  வெண்கலப்பதக்கமும் வென்றனர். இதன் மூலம் பொன் விக்ரம், குமார் சத்தீஸ்கர் மாநிலத்தில் அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டிக்குத் தகுதி  பெற்றுள்ளனர். சாதனை படைத்த  இவர்களை பள்ளி சேர்மன்  இசக்கி சுப்பையா, இயக்குநர் இசக்கிதுரை, முதல்வர் ஜெயலட்சுமி, அலுவலக  இயக்குநர் ராம்குமார் பாராட்டினர். மற்றும் மாணவர்களுக்கு  பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள்  பாலமுருகன், கார்த்திக்,  பொன்லட்சுமிதேவி, இசக்கிதுரை, முருகேஷ்வரி உள்ளிட்டோரையும் பாராட்டினர்.

Tags : Rivalry Tenkasi Isaki School Status Adventure ,
× RELATED குண்டாசில் இருவர் கைது