×

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பொன்னமராவதி,அக்.2: பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் சிதம்பரம், பொருளாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஆழ்வாரப்பன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மத்திய அரசு வழங்குவது போல மருத்துவப்படி ரூ.ஆயிரம் வழங்க வேண்டும், 21 மாத நிலுவை தொகையினை உடனே வழங்க வேண்டும், கிராம உதவியாளர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு பண்டிகை முன்பணம் வழங்க வேண்டும், அனைவருக்கும் பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், கிராம உதவியாளர்களுக்கு மருத்துவக்காப்பீட்டு திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், பாதுகாப்புத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வட்டத்தலைவர் ராமன், நிர்வாகிகள் கமலக்கண்ணன், உதயசூரியன், ரமணன், சுப்பு, செல்வராஜ், ரெங்கரசாமி, கண்ணுச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை: தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் கருப்பையா தலைமை வகித்தார். இதில் பலர் கோரிக்கைகள் குறித்து கண்டன உரையாற்றினர். புதுக்கோட்டையில் வீட்டுவரி உயர்த்தப்பட்டு உள்ளதை ரத்து செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர்கள் பலர் கலந்து கொண்டனர்.கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் பழனியாண்டி தலைமை வகித்தார்.வட்ட செயலாளர் ராமதாஸ் வரவேற்றார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் சக்திவேல், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் மாவட்ட தலைவர் காமராஜ், மாவட்ட செயற்குழு சாமியய்யா, வட்ட துணை செயலர் பழனிவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட துணைத் தலைவர் ராமச்சந்திரன் நிறைவுரையாற்றினார். வட்டார பொருளாளர் ராஜப்பா நன்றி கூறினார்.


Tags : Pensioners union ,protest ,
× RELATED குடியிருப்புகளை சூழ்ந்த கழிவுநீரை...