×

மணல் கடத்திய 2 மாட்டு வண்டி பறிமுதல்

திருக்கனூர், அக். 1: திருக்கனூர் அருகே சுத்துக்கேணி சங்கராபரணி ஆற்றில் மணல் கடத்திய 2 மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பியோடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.புதுவை மாநிலம் திருக்கனூர் அருகே உள்ள காட்டேரிக்குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுத்துக்கேணி சங்கராபரணி ஆற்றில் இருந்து 2 மாட்டுவண்டிகளில் மணல் ஏற்றி வந்து கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்தவுடன் மாட்டுவண்டிகளை மணலுடன் விட்டுவிட்டு உரிமையாளர்கள் தப்பியோடி விட்டனர்.விசாரித்தபோது அவர்கள் தமிழக பகுதியான நைனார்பாளையம் முருகன் மற்றும் விநாயகபுரத்தை சேர்ந்த விஜயகுமார் என தெரியவந்தது. இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 மாட்டுவண்டிகளும் மணலுடன் பறிமுதல் செய்யப்பட்டு காட்டேரிக்குப்பம் காவல்நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Tags : Sand ,
× RELATED சென்னை மெரினாவில் பெண்ணின் கண்ணில் மணலை கொட்டி பணப்பை கொள்ளை!