×

கொடைக்கானலில் போலி பட்டாக்கள் ரத்து தொடரும்+

கொடைக்கானல், அக். 1: கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள போலி பட்டாக்கள் தொடர்ந்து ரத்து செய்யப்படும் என ஆர்டிஓ சுரேந்திரன் தெரிவித்தார். கொடைக்கானல் மலைப்பகுதிகளில் நிலத்தின் மதிப்பு அதிகமாக இருப்பதால் அரசின் நிலங்கள், தரிசு நிலங்கள் உள்ளிட்டவைகளை தனியார் பலர் ஆக்கிரமித்து போலி பட்டாக்களை பெற்று பல கோடிகளுக்கு விற்று வருகின்றனர். குறிப்பாக வில்பட்டி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும், வடகவுஞ்சி, அடுக்கம் பகுதிகளிலும் இது போன்ற போலி பட்டாக்களை பெற்று மோசடி நடந்து வருகின்றது. இதையடுத்து வருவாய் துறையினர் ஆய்வு செய்து வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 100 ஏக்கர் அளவிலான அரசு தரிசு நிலங்களை க்கிரமிப்பு செய்தவர்களின் போலி பட்டாக்களை ரத்து செய்தது. தொடர்ந்து இதுபோன்ற போலி பட்டாக்கள் ரத்து செய்யப்படும். அடுத்து வடகவுஞ்சி, அடுக்கம் பகுதிகளிலும் உள்ள போலி பட்டாக்களை ரத்து செய்வதற்கு வருவாய்த்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என ஆர்டிஓ சுரேந்திரன் தெரிவித்தார்.

Tags : Kodaikanal ,
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்