×

போச்சம்பள்ளியில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி சென்னை சிட்டி போலீஸ் அணி முதலிடம்

போச்சம்பள்ளி, அக்.1:  போச்சம்பள்ளியில் நடந்த மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சென்னை சிட்டி போலீஸ் அணி முதலிடம் பிடித்தது.
போச்சம்பள்ளி வட்டம், நாகரசம்பட்டி பெரியார் ராமசாமி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேரு ஹாக்கி குழு மற்றும் மோகன் நினைவு ஹாக்கி குழு சார்பில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களிலிருந்து 36 அணிகள் பங்கேற்றன.

நாக்-அவுட் முறையில் நடந்த போட்டியில் கோவில்பட்டி பாண்டவர் மங்களம் அணி, சங்ககிரி நண்பர்கள் ஹக்கி கிளப், சென்னை சிட்டி போலீஸ் அணி, கோவில்பட்டி எஸ்எஸ்டிஎம் அணி, நாகரசம்பட்டி நேரு ஹாக்கி கிளப் அணிகள் இறுதி ஆட்டத்திற்கு நுழைந்தன. இறுதிப் போட்டியில் சென்னை சிட்டி போலீஸ் அணி முதலிடம் பிடித்தது. அதனைத்தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஹாக்கி சங்க செயலாளர் ஞானசேகரன் மற்றும் விளையாட்டு குழுவினர் செய்திருந்தனர்.

Tags : Chennai ,city police team ,hockey tournament ,
× RELATED சென்னையில் மக்கள் தேவையின்றி வெளியே...