×

பெரம்பலூர் குறைதீர் முகாமில் 302 மனுக்கள் குவிந்தன

பெரம்பலூர், அக். 1: பெரம்பலூரில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கை தொடர்பாக 302 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சாந்தா தலைமை வகித்தார். கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 302 மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர்.பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர், சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்துக்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

மேலும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்ற வேண்டுமென அறிவுரை வழங்கினார்.இதைதொடர்ந்து குன்னம் வட்டம் அகரம்சிகூர் கிராமத்தில் ஆட்சேபனையான புறம்போக்கில் வசித்து வந்த இருவருக்கு மாற்று இடம் தேர்வு செய்தும், வடக்கலூர் மற்றும் பரவாய் கிராமத்தில் தலா ஒருவருக்கு வசிப்பிடத்துக்கான பட்டாவை கலெக்டர் சாந்தா வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சக்திவேல், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கங்காதேவி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags : Perambalur ,gateway camp ,
× RELATED குழந்தை திருமணம் செய்து வைத்தால்...