×

அரியலூர் மாவட்டத்தில் ரோந்து காவலர்கள் இருக்கும் இடத்தை அறிய புதிய செயலி

அரியலூர், அக். 1: அரியலூர் மாவட்டத்தில் ரோந்து காவலர்கள் இருக்கும் இடத்தை அறியும் வகையில் புதிய செயலியை மாவட்ட எஸ்பி னிவாசன் துவக்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை முற்றிலும் தடுக்கும் விதமாக எஸ்பி னிவாசன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதில் குற்றவாளிகளை எளிதில் பிடிக்கவும், மேலும் அவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்கவும் மூன்றாம் கண்ணான சிசிடிவி கேமராக்களை வணிக நிறுவனங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், வீடுகளிலும் பொருத்த தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார். அதேபோல் காவல்துறை சார்பில் அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், திருமானூர் உட்பட பல்வேறு நகர பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அதுபோல் அரியலூரில் இயங்கி வரும் சிமென்ட் ஆலைகளின் பங்களிப்போடு முக்கிய சாலைகள், சாலைகள் சந்திப்பு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்க ஏற்பாடுகளை செய்துள்ளார். அந்த வகையில் இரவுநேர ரோந்து காவலர்கள் எங்கு பணியில் உள்ளனர் என்பதை அறியும் வகையில் புதிய மொபைல் செயலியை சென்னை தனியார் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கினார். இதையடுத்து நேற்று எஸ்பி னிவாசன், அரியலூர் ஸ்டேட் பாங்க் ஏடிஎம்மில் கியூஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டி துவக்கி வைத்தார். இதன்மூலம் இரவுநேர ரோந்து காவலர்கள் எங்கு உள்ளனர் என்பதை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளலாம். மேலும் உடனடியாக அவர்களை தொடர்பு கொண்டு குற்ற சம்பவங்களை தடுப்பதற்கு அழைக்கலாம்.

Tags : Ariyalur district ,
× RELATED அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி...