×

சவுதி அரேபியாவில் மருத்துவத்துறையில் பணிபுரிய தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் இன்று கடைசி நாள்

பெரம்பலூர், செப். 30: சவுதி அரேபிய நாட்டில் மருத்துவத்துறையில் பணிபுரிய தகுதியானோர் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பெரம்பலூர் கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சவுதி அரேபிய நாட்டில் ஜூபைலில் உள்ள முன்னணி மருத்துவமனைக்கு 35 வயதுக்கு உட்பட்ட டிப்ளோமா, பி.எஸ்.சி படித்த ஆண் செவிலியர்கள் மற்றும் 40 வயதுக்குஉட்பட்ட 2 வருட பணி அனுபவமுள்ள பிஎஸ்சி படித்த ஆண்கள் தேவைப்படுகின்றனர்.மேலும் 40 வயதுக்கு உட்பட்ட பெண், 60 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர். தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு அனுபவத்திற்கேற்றவாறு மாத ஊதியம், இலவச விமான டிக்கெட், உணவுப்படி, இருப்பிடம், விசா, மருத்துவச்சலுகை மற்றும் சவுதி அரேபிய நாட்டின் சட்டதிட்டத்திற்கு உட்பட்ட இதர சலுகைகள் வழங்கப்படும். எனவே விருப்பமுள்ளவர்கள் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மின்னஞ்சல் ovemclsn @gmail.com என்ற முகவரிக்கு தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளைநிற பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் இன்று (30ம் தேதி) மாலைக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.ஊதியம் மற்றும் பணி விரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளமான www.omc manpower.com ல் அறிந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : applicants ,Saudi Arabia ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் 32,571 பேர்...