×

வீட்டில் தூங்கிய டிரைவர் மீது கொலைவெறி தாக்குதல்

புதுச்சேரி, செப். 30: முதலியார்பேட்டையில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த கார் டிரைவரை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் இரும்பு ராடு மற்றும் உருட்டுக்கட்டையால் சரமாரி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுவை முதலியார்பேட்டை பட்டம்மாள் நகரை சேர்ந்தவர் அருண்குமார் (23). கார் டிரைவர். நேற்று முன்தினம் மதியம் இவர், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டினுள் புகுந்தது. அவர்கள் கையில் இரும்பு ராடு மற்றும் உருட்டுக்கட்டைகள் இருந்தன. பின்னர் அந்த கும்பல், அருண்குமாரை ஆயுதங்களால் சரமாரி தாக்கி விட்டு, அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்த புகாரின்பேரில் முதலியார்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரசாமி தலைமையிலான போலீசார் வழக்குபதிந்து தேடி வருகின்றனர். பெண் விவகாரத்தால் இச்சம்பவம் நடந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏலச்சீட்டு நடத்தி டிராவல்ஸ் அதிபரிடம் ரூ.34 லட்சம் மோசடி
புதுச்சேரி, செப். 30: புதுவையில் ஏலச்சீட்டு நடத்தி டிராவல்ஸ் உரிமையாளரிடம் ரூ.34 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக  சிட்பண்ட் நிறுவன உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.புதுவை குயவர்பாளையம் ராஜய்யர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (37). டிராவல்ஸ் உரிமையாளர். புதுவை கோவிந்தசாலையை சேர்ந்தவர் அமல்ராஜ். இவர், அண்ணா சாலையில் சிட்பண்ட் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். அமல்ராஜின் சிட்பண்ட் நிறுவனத்தில் ரூ.10 லட்சம் மற்றும் ரூ.5 லட்சம் ஏலச்சீட்டுகளில் வடிவேல் சேர்ந்துள்ளார். 2016 ஜூன் 17ம் தேதி முதல் இதற்கான தொகையை மாதந்தோறும் வடிவேல் செலுத்தி வந்துள்ளார். ஆனால் சீட்டுகாலம் முடிந்த பிறகும், அதற்கான தொகையை அமல்ராஜ் தராமல் ஏமாற்றி விட்டதாக தெரிகிறது.

இதுபற்றி வடிவேல் கேட்டதற்கு, சீட்டு பணத்தை தனது பல்பொருள் அங்காடியில் முதலீடாக போட்டு இருப்பதாகவும், மேற்கொண்டு ரூ.10 லட்சம் தந்தால் கடையில் பங்குதாரராக சேர்ப்பதாகவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய அவர், அமல்ராஜ் கூறியபடி கடையில் இருந்த பிரகாஷ் என்பவரிடம் ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். இதற்கிடையே, ஏலச்சீட்டு தொகையான ரூ.34 லட்சத்தை அமல்ராஜிடம் அவரது வீட்டுக்கு சென்று வடிவேலு கேட்டுள்ளார். ஆனால் தராமல், கூலிப்படை ஏவி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.இது குறித்து வடிவேல், பெரியகடை காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சிட்பண்ட் நிறுவன உரிமையாளர் அமல்ராஜை தேடி வருகின்றனர்.

Tags : Murder attack ,home ,
× RELATED நக்சல், தீவிரவாதத்தை ஒழிக்க மோடிதான்...