×

பருத்தி வரத்து குறைந்தது ரூ.13.34லட்சத்துக்கு ஏலம்

அவிநாசி,செப்.26:  அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.13.34 லட்சத்துக்கு பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 800 பருத்தி மூட்டைகள் வந்திருந்தன. சென்ற வாரத்தைவிட ஏலமையத்துக்கு, பருத்தி மூட்டைகள் வரத்து 400 மூட்டைகள் குறைந்து இருந்தது. ஏலத்தில், ஆர்.சி.எச். பி.டி. ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5000 முதல் ரூ.5800 வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2000 முதல் ரூ.  3000 வரையிலும் ஏலம் போனது.பருத்தி ஏல மையத்தில் மொத்தம் ரூ.13.34 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம் நடைபெற்றது. இந்த ஏலத்தில், கோபி, நம்பியூர்,  புளியம்பட்டி, சேவூர், குன்னத்தூர், அன்னூர், மேட்டூர், தஞ்சாவூர், பேராவூரணி, தர்மபுரி, ஆத்தூர், சத்தியமங்கலம், பென்னாகரம்,  கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளிலிருந்து 173 பருத்தி விவசாயிகளும், கோவை, ஈரோடு பகுதியிலிருந்து 10 பருத்தி வியாபாரிகளும் ஏலத்தில் பங்கேற்றனர். சென்ற வாரத்தைவிட, இந்த வார ஏலத்தில் அடை மழை காரணமாக வரத்து 500 மூட்டைகள் குறைந்து இருந்தது. இந்த தகவலை அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள்  கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குநர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.

Tags : bidding ,Cotton ,
× RELATED சீனாவுக்கு பருத்தி ஏற்றுமதியால் கடன்...