×

தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் இடைப்பாடி நகராட்சியில் ஒருங்கிணைந்து துப்புரவு பணி

இடைப்பாடி, செப். 26:  இடைப்பாடி நகராட்சி 29வது வார்டில், தூர்மை பாரதம் திட்டத்தின் கீழ், ஏரி ரோட்டில் 100க்கும் மேற்பட்ட துப்புரவு பணியளர்கள் கலந்துகொண்டு, மாஸ் கிளீனிங் எனும் கூட்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
இடைப்பாடி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. வடகிழக்கு பரும மழையின் முன்னேற்பாடு பணியில் ஒரு பகுதியாக, நகராட்சி 29வது வார்டு பகுதியில் உள்ள ஏரி ரோட்டில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாஸ் கிளீனிங் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. சாக்கடைகளை தூய்மை படுத்தி, பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி, கொசு மருந்து அடித்தனர்.தொடர்ந்து வீடு வீடாக சென்று சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு சுகாதார அலுவலர் செந்தில்குமார் தலைமை வகத்தார். சுகாதார ஆய்வாளர்கள் தங்கவேலு, முருகன், ஜான்விக்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டு வாரியாக மாஸ் கிளீனிங் பணி நடைபெறும் என ஆணையாளர் (பொ) முருகன் தெரிவித்தார்.

Tags :
× RELATED நண்பர் மீது ஆசிட்டை ஊற்றிய வெள்ளிப்பட்டறை தொழிலாளி